தவறு செய்துவிட்டேன், எனக்கு பிரச்சனை உள்ளது.. வருந்தும் ஸ்ரீகாந்த்

நடிகர் ஸ்ரீகாந்த்
நடிகர் ஸ்ரீகாந்த், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.
இவர் சமீபத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
படத்தில் நடித்த பணத்தில் ரூ. 10 லட்சம் பாக்கி இருந்தது, பாக்கி தொகைக்கு பதிலாக 3 முறை கொக்கைன் கொடுக்கப்பட்டது.
4வது முறையாக தானே கேட்கும் அளவிற்கு கொக்கைனுக்கு அடிமையானதாக நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
நடிகர் மனு
தற்போது ஜாமீன் கேட்டு நடிகர் ஸ்ரீகாந்த் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
அதில் அவர், நான் தவறு செய்துவிட்டேன், எனது மகனை கவனித்துக் கொள்ள வேண்டும், குடும்பத்தில் பிரச்சனை உள்ளது என கூறி மனு அளித்துள்ளார்.