8 மணி நேரம் வேலை நியாயம் தான்.. தீபிகா மறுத்த நிலையில், ஜெனிலியாவின் அதிரடி பதில்

8 மணி நேரம் வேலை நியாயம் தான்.. தீபிகா மறுத்த நிலையில், ஜெனிலியாவின் அதிரடி பதில்

ஜெனிலியா

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. இப்படம் இவருக்கு நல்ல ரீச் கொடுக்க தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியில் பல வெற்றி படங்களில் நடித்து வந்தார்.

தமிழில் ஜெனிலியா சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதை வென்றார்.

இதனிடையே பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரியான் மற்றும் ரஹில் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

தற்போது, ஜெனிலியா பாலிவுட்டில் அமீர்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சித்தாரே ஜமீன் பர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

8 மணி நேரம் வேலை நியாயம் தான்.. தீபிகா மறுத்த நிலையில், ஜெனிலியாவின் அதிரடி பதில் | Genelia Open Talk About 8 Hours Work

நியாயம் தான்

இந்நிலையில், பேட்டி ஒன்றில் ஜெனிலியா பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், ” 8 மணி நேரம் வேலை செய்வது கடினமான ஒன்று தான். ஆனால், அது முடியாதது இல்லை. தாய்மார்களுக்கு இது கடினமான ஒன்று. இருப்பினும் அது சமாளிக்க முடியாதது இல்லை.

நான் ஒரு நாளைக்கு 10 மணிநேரம் வேலை செய்கிறேன். சில சமயங்களில் 11 அல்லது 12 மணி நேரம் வேலை செய்வேன். இது நியாயமானது என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

8 மணி நேரம் வேலை காரணமாக ஸ்பிரிட் படத்திலிருந்து தீபிகா படுகோனே வெளியேறிய நிலையில், தற்போது ஜெனிலியாவின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது.     

8 மணி நேரம் வேலை நியாயம் தான்.. தீபிகா மறுத்த நிலையில், ஜெனிலியாவின் அதிரடி பதில் | Genelia Open Talk About 8 Hours Work

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *