''பிச்சைக்காரர் வேடத்தை ஏற்றுக்கொண்டதே முதல் வெற்றிதான்'' – தேவி ஸ்ரீ பிரசாத்

சென்னை,
தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ரஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கும் ”குபேரா” படத்தின் வெற்றி விழா நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடைபெற்றது.
அந்த நிகழ்வில் இப்படத்திற்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத், ” தனுஷ் இப்படத்திற்காக தேசிய விருது பெற வாழ்த்தி இருக்கிறார். அவர் கூறுகையில்,
“தனுஷ் சார், பிச்சைக்காரர் வேடத்தை ஏற்றுக்கொண்டதே முதல் வெற்றிதான். புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று வாழ்த்து தெரிவித்த முதல் நபர் நான்தான். இப்போது குபேராவுக்காக நீங்கள் தேசிய விருது பெற வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்” என்றார்.