தமிழில் வெளியான அனுஷ்கா ஷெட்டியின் ”காதி” பட முதல் பாடல் |AnushkaShetty’s Ghaati First Single Sailore (Tamil) out now

சென்னை,
அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள ‘காதி’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தமிழில் வெளியாகியுள்ளது. ‘சைலோரே’ எனத்தொடங்கும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது
அருந்ததி’ என்ற பேய் படத்தில் நடித்து பிரபலமானவர் அனுஷ்கா ஷெட்டி. இவரின் சினிமா வாழ்க்கையில் ‘பாகுபலி’ முக்கிய படமாக அமைந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’.
தற்போது இவர் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் தனது 50-வது படமான “காதி” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் இப்படம் ஜூலை 11ம் தேதி வெளியாக உள்ளது.