என் கூடவே அவரையும் அழைத்து செல்கிறேனா? ஆவேசமான சாய் பல்லவி

என் கூடவே அவரையும் அழைத்து செல்கிறேனா? ஆவேசமான சாய் பல்லவி


இனிமேல் என்னை பற்றி வதந்தி பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.



சாய் பல்லவி



பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்த சாய் பல்லவி, தென்னிந்திய சினிமாவில் முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார். 



சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டானதையடுத்து பாலிவுட்டில் ரன்பீர் கபூருடன் ராமாயணம் என்ற படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 



சைவ வதந்தி



இந்நிலையில், இந்த படத்தில் நடிப்பதால், படப்பிடிப்பு முடியும் வரை சாய் பல்லவி அசைவம் சாப்பிடுவதில்லை என்றும், ஹோட்டலில் சாப்பிடாமல் வெளியூர் செல்லும் போது சமையல்காரர்களை அழைத்து செல்கிறார், அவர்கள் சைவ உணவுகளையே சமைத்து தருகிறார்கள் என்றும் தகவல் வெளியானது. 

sai pallavi


இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில் ஆவேசமான நடிகை சாய் பல்லவி, இது போன்ற வதந்திகளை பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.



சட்ட நடவடிக்கை



இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பெரும்பாலான சமயங்களில், கிட்டத்தட்ட எல்லா நேரங்களிலும், அடிப்படையற்ற வதந்திகள், இட்டுக்கட்டப்பட்ட பொய்களை பரப்பும் போது அமைதியாக இருப்பதையே தேர்வு செய்வேன்.



தவறான அறிக்கைகள் உள்நோக்கத்துடன் பரப்பப்படுவதைக் காணும் போதெல்லாம் நான் அமைதியாக இருப்பதையே தேர்வு செய்கிறேன். ஆனால் அது நிற்காமல் தொடர்ந்து நடப்பதால் நான் எதிர்வினையாற்ற வேண்டியுள்ளது.


குறிப்பாக எனது பட வெளியீடுகள், அறிவிப்புகள் என எனது கேரியரின் முக்கியமான தருணங்களில் இது போன்ற வதந்திகள் பரப்புகிறது. அடுத்த முறை எந்த ஒரு புகழ்பெற்ற ஊடகமோ, தனிநபரோ, செய்தி அல்லது கிசுகிசு என்ற பெயரில் கேவலமான கதையைவெளியிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என்று தெரிவித்துள்ளார்      


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *