ஆனந்தம் சீரியலில் நடித்த இந்த நடிகையை நினைவு இருக்கா..

ஆனந்தம் சீரியல்
90ஸ் கிடஸின் மனதை கவர்ந்த சீரியல்களில் ஒன்று ஆனந்தம். தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான சுகன்யா இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். கடந்த 2003ம் ஆண்டு இந்த சீரியல் துவங்கியது.
கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த சீரியல் 2009ம் ஆண்டு நிறைவு பெற்றது.
பிருந்தா தாஸ்
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றிபெற்ற இந்த ஆனந்தம் சீரியலில் அபிராமி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை பிருந்தா தாஸ். ஆனந்தம் சீரியலை தவிர கல்யாணம், ரேகா IPS ஆகிய சீரியல்களிலும் இவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஆனந்தம் சீரியலில் பார்த்த நடிகை பிருந்தா தாஸின் லேட்டஸ்ட் போட்டோ வெளியாகியுள்ளது. இதோ நீங்களே பாருங்க.
ஆனந்தம் சீரியல் மூலம் பிரபலமான நடிகை பிருந்தா தாஸின் மகன்தான் பிரபல நடிகர் கிஷன் தாஸ். இவர் முதல் நீ முடிவும் நீ, சிங்கப்பூர் சலூன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.