அன்புள்ள.. விஜய் பிறந்தநாள் முன்னிட்டு நயன்தாரா போட்ட நெகிழ்ச்சி பதிவு

விஜய்
தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் விஜய். ரசிகர்களால் தளபதி என்று அன்போடு அழைக்கப்படும் இவர் தற்போது அவரது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.
அதன் பின், சினிமாவை விட்டு விலகி அரசியலில் முழுவதுமாக கவனம் செலுத்த உள்ளார். இந்த முடிவு இவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தாலும் விஜய் மேல் உள்ள அன்பின் காரணமாக இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
நெகிழ்ச்சி பதிவு
இந்நிலையில், நடிகர் விஜய் இன்று அவரது 51 – வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்கு ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகை நயன்தாரா விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து அவரது ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ” அன்புள்ள விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வரவிருக்கும் ஆண்டு சிறப்பாக அமையட்டும். ஜனநாயகனுக்கும் எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து சில வெற்றி படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
Happiest Birthday dearest #Thalapathy @actorvijay 🎂Have a great Year ahead😇 Best wishes for #JanaNayagan 👍
— Nayanthara✨ (@NayantharaU) June 21, 2025