சக்திமானாக அல்லு அர்ஜுனா?…- வதந்திகளுக்கு முறுப்புள்ளி வைத்த பாசில் ஜோசப்|Basil Joseph dismisses rumors of Allu Arjun playing Shaktimaan

சென்னை,
சக்திமான் என்பது தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒரு பிரபல சூப்பர் ஹீரோ தொலைக்காட்சி நிகழ்ச்சி. இதில், முகேஷ் கன்னா சக்திமானாக நடித்திருந்தார்.
தற்போது இது திரைப்படமாக உருவாக இருக்கிறது. இதில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் சக்திமானாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
இதற்கிடையில் இப்படத்தை, விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட சூப்பர் ஹீரோ படமான ”மின்னல் முரளி”யை இயக்கிய மலையாள நடிகரும் இயக்குனருமான பாசில் ஜோசப் இயக்க உள்ளதாகவும் ரன்வீர் சிங்கிற்கு பதிலாக அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில், சமீபத்திய நேர்காணலில், இந்த வதந்திகளுக்கு பாசில் ஜோசப் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதன்படி, ”சக்திமான்” படம் ரன்வீர் சிங்குடன் மட்டுமே எடுக்கப்படும் என்று அவர் உறுதியாகக் கூறினார்.