திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை வித்யா பாலன் சாமி தரிசனம்

திருப்பதி,
2005-ம் ஆண்டு வெளியான ‘பிரினீதா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் வித்யா பாலன். ‘பா’, ‘கஹானி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் மறைந்த நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இப்படத்துக்குப் பிறகு நாயகியை மையமாகக் கொண்ட திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். இவர் கடைசியாக ‘பூல் பூலைய்யா 3’ படத்தில் நடித்திருந்தார். அனீஸ் பஸ்மி இயக்கிய இப்படத்தில் கார்த்தி ஆர்யன், திரிப்தி டிம்ரி, வித்யா பாலன், மாதுரி தீட்சித் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்நிலையில், நடிகை வித்யா பாலன் இன்று திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வந்த அவரை, அதிகாரிகள் வரவேற்று சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து வைத்தனர். அவருக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம், சாமி படத்தை அதிகாரிகள் வழங்கினர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றன.