23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீ-ரிலீசான 'பகவதி' திரைப்படம்

23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீ-ரிலீசான 'பகவதி' திரைப்படம்


சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பகவதி’. காதல் படங்களில் கலக்கி கொண்டிருந்த விஜய், இந்த படத்தின் மூலமாக ஆக்ஷன் கதாநாயகனாக உயர்ந்தார். இந்த படத்தை ஏ. வெங்கடேஷ் இயக்கியிருந்தார்.

இதில் ரீமாசென் கதாநாயகியாக நடித்திருந்தார். விஜய்யின் தம்பியாக ஜெய், இந்த படத்தின் மூலம் அறிமுகமானார். ஆஷிஷ் வித்யார்த்தி, யுகேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். குறிப்பாக படத்தில் விஜய்-வடிவேல் காமெடி மிகவும் பேசப்பட்டது. டீக்கடை வைத்திருக்கும் விஜய் தன்னுடைய தம்பியின் குழந்தையைக் காப்பாற்ற எப்படி மிகப்பெரிய ‘கேங்ஸ்டராக’ மாறுகிறார் என்பதே படத்தின் கதை.

இப்படம் வெளியாகி 23 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இப்படம் மீண்டும் திரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ‘டிஜிட்டல்’ படைப்பாக 4கே தரத்தில் மதன் மூவிஸ் சார்பில் சி.ஜெயராஜ் வெளியிட்டார். இது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்தது.

நேற்று ‘குபேரா’, ‘டி.என்.ஏ.’, ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ ஆகிய படங்கள் ரிலீஸான போதும் ‘பகவதி’ படம் வெளியிடப்பட்ட தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் கூட்டத்தை பார்க்க முடிந்தது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *