2017ல் வெளிவந்த சிறந்த தமிழ் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

2017ல் வெளிவந்த சிறந்த தமிழ் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

2017ல் வெளிவந்த சிறந்த தமிழ் படங்கள் என்னென்னெ என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

விக்ரம் வேதா

மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் 2017 வெளிவந்த இந்த படத்தை புஷ்கர் காயத்ரி ஆகியோர் இயக்கி இருந்தனர். Neo-noir வகையில் ஆக்ஷன் திரில்லர் கதை உடன் இந்த படத்தை அவர்கள் இயக்கி இருந்தார்கள்.

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விக்ரம் (மாதவன்) பெரிய தாதாவான வேதாவை (விஜய் சேதுபதி) தேடுகிறார். ஆனால் விஜய் சேதுபதிவே வந்து சரண்டர் ஆகி ‘ஒரு கதை சொல்லட்டுமா சார்’ என கேட்டு தனது கதையை சொல்ல தொடங்குகிறார்.

தனது தம்பி தவறுதலாக என்கவுண்டரில் கொல்லப்பட்டதற்கு அவர் எப்படி பழிவாங்குகிறார் என்பதை மிகவும் த்ரில்லிங் ஆக காட்டி இருக்கிறார்கள் இயக்குனர்கள்.

2017ல் வெளிவந்த சிறந்த தமிழ் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ | 2017 Best Tamil Movies

மாநகரம்

முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படம் தான் மாநகரம். சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா, சார்லி உள்ளிட்டோர் நடித்து 2017 மார்ச் 10ம் தேதி படம் ரிலீஸ் ஆனது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, நல்ல வரவேற்பு பெற்றதால் நல்ல லாபத்தையும் தயாரிப்பாளருக்கு பெற்றுக்கொடுத்தது மாநகரம்.

தீரன் அதிகாரம் ஒன்று

மிக கொடூரமாக மக்களை கொன்று வீட்டை கொள்ளை அடிக்கும் வடநாட்டு கும்பல். அவர்களை போலீஸ் ஹீரோ கார்த்தி எப்படி அவர்கள் ஊருக்கே சென்று கைது செய்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதை.

சதுரங்க வேட்டை பட புகழ் இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவான தீரன் அதிகாரம் ஒன்று நல்ல லாபத்தையும் பெற்றுக் கொடுத்தது.

2017ல் வெளிவந்த சிறந்த தமிழ் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ | 2017 Best Tamil Movies

அறம்

கோபி நைனார் இயக்கத்தில் கடந்த 2017ல் நவம்பர் 10ம் தேதி ரிலீஸ் ஆன படம் அறம். மாவட்ட ஆட்சியராக நயன்தாரா நடித்து இருப்பார்.

போர்வெல் உள்ளே விழுந்த குழந்தையை மீட்க சந்திக்கும் சிக்கல்கள் தான் இந்த படத்தின் கதை.

அருவி

அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அருவி படம் 2017 டிசம்பர் 1ம் தேதி ரிலீஸ் ஆனது.


குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒரு பெண், மக்கள் பிரச்சனைக்கு தீர்வு சொல்வதாக நடத்தப்படும் டிவி ஷோவில் கலந்துகொள்கிறார். அங்கு அவருக்கு நீதி கிடைத்ததா இல்லையா என்பது தான் கதை.

2017ல் வெளிவந்த சிறந்த தமிழ் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ | 2017 Best Tamil Movies

8 தோட்டாக்கள்

வெற்றி, அபர்ணா பாலமுரளி, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் 2017 ஏப்ரல் 7ம் தேதி ரிலீஸ் ஆன படம் தான் 8 தோட்டாக்கள்.

ஒரு காவல்துறை அதிகாரி 8 தோட்டாக்கள் இருக்கும் துப்பாக்கியை தொலைத்துவிடுகிறார். அதை வைத்து வேறு சில குற்றச்செயல்கள் நடக்கிறது.

அதை செய்தது யார், வங்கி கொள்ளையில் ஈடுபட்டது யார் என மிகவும் சுவாரஸ்யமாக காட்டப்பட்டு இருக்கும் படம் தான் இது.

2017ல் வெளிவந்த சிறந்த தமிழ் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ | 2017 Best Tamil Movies

பா.பாண்டி

பா.பாண்டி என்கிற பவர் பாண்டி படம் தனுஷ் இயக்குனராக அறிமுகம் ஆன படம். அவர் முதல் பட இயக்கத்திலேயே ரசிகர்கள் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்து இருந்தார்.

வயதான ராஜ்கிரண் சினிமா ஸ்டண்ட் மேன் ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் சில காரணங்கள் மகன் வீட்டை விட்டு வெளியேறி தனது முன்னாள் காதலியை பார்க்க செல்வது தான் இந்த படத்தின் கதை.
 

2017ல் வெளிவந்த சிறந்த தமிழ் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ | 2017 Best Tamil Movies

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *