“Suriya 45” film title will release tomorrow

சென்னை,
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 45’ என்று பெயரிடப்பட்டுள்ளது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் சூர்யாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கிறார்.மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இதில் சூர்யா வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் இந்த படத்தின் டைட்டில் ரிலீஸ் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.சூர்யா நடிக்கும் ‘சூர்யா 45’ படத்தின் டைட்டில் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
படத்தின் இயக்குநரான ஆர்.ஜே.பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘சூர்யா 45’ படத்தின் டைட்டில் வெளியாகிறது. இதற்கிடையில் இந்த படத்திற்கு ‘வேட்டை கருப்பு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.