2001ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த படங்கள்

2001ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த படங்கள்

2001ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் காதல், ஆக்ஷன், குடும்பம், காமெடி, ரொமான்ஸ் போன் கதைக்களத்தில் நிறைய படங்கள் வெளியாகியுள்ளன.

அப்படி இந்த வருடத்தில் வெளியான சிறந்த படங்களின் விவரத்தை காண்போம்.

2001ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த படங்கள் | 2001 Best Tamil Movies

மின்னலே

மாதவன், விவேக், ரீமா சென் என பலர் நடிக்க கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான படம் மின்னலே.

காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் கதையை தாண்டி ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் இசை தான் ஹைலைட். இப்போதும் மின்னலே படத்திற்கு மக்களிடம் நல்ல கிரேஸ் உள்ளது.

2001ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த படங்கள் | 2001 Best Tamil Movies

தீனா

அஜித்தின் சினிமா பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது தீனா.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜித்தை தாண்டி லைலா, சுரேஷ் கோபி என பலர் நடித்த இப்படம் அஜித்தின் திரைப்பயணத்தில் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

ஆக்ஷன் கதைக்களத்தை கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு இன்னொரு ஹைலைட் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை தான்.

2001ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த படங்கள் | 2001 Best Tamil Movies

ப்ரண்ட்ஸ்

வயிறு குலுங்க குலுங்க மக்களை சிரிக்க வைத்த ஒரு திரைப்படம். இதில் வடிவேலுவின் காமெடி பற்றி சொல்லவே வேண்டியது இல்லை, அந்த அளவிற்கு கொண்டாடப்பட்டது.

சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா, வடிவேலு, தேவயானி என பலர் நடிக்க உருவான இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

2001ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த படங்கள் | 2001 Best Tamil Movies

ஆனந்தம்

குடும்பங்கள் கொண்டாடிய, கொண்டாடும் திரைப்படமாக அமைந்தது ஆனந்தம் திரைப்படம். லிங்குசாமி இயக்கத்தில் மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா என பலர் நடித்துள்ளனர்.

4 அண்ணன்-தம்பிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவானது.

2001ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த படங்கள் | 2001 Best Tamil Movies

நந்தா

பாலா இயக்கத்தில் சூர்யாவின் மாறுபட்ட நடிப்பில் வெளியான படம் நந்தா.

ஆக்ஷன், குடும்பம், காதல் என தயாரான இப்படத்தில் சூர்யாவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படத்தில் இடம்பெற்ற யுவன் ஷ்ங்கர் ராஜா இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.  

2001ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த படங்கள் | 2001 Best Tamil Movies

இப்படங்களை தாண்டி பூவெல்லாம் உன் வாசம், பாண்டவர் பூமி, சிட்டிசன், டும் டும் டும், தில் போன்ற படங்களும் நல்ல வரவேற்பு பெற்ற படங்கள் தான். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *