நான் வெற்றியாளராக இருக்க விரும்புகிறேன் – நடிகர் அஜித்குமார் | I want to be a winner

நான் வெற்றியாளராக இருக்க விரும்புகிறேன் – நடிகர் அஜித்குமார் | I want to be a winner


சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் சமீபத்தில் ‘குட் பேட் அக்லி’ படம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து தனது 64-வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாகவும், அதில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘குட் பேட் அக்லி’ படத்திற்கு பிறகு கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித்குமார். சினிமா, கார் ரேஸ் இரண்டிலும் ஒரே நேரத்தில் கால் வைக்காமல், 6 மாதம் சினிமாவிலும், 6 மாதம் கார் ரேஸிலும் இருப்பேன் என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அஜித்குமார் பேசியதாவது, “முதன்முதலில் நான் நடிக்க வந்தபோது தமிழ் சரியாக பேசவில்லை. எனது உச்சரிப்பில் ஆங்கில மொழியின் சாயல் அதிகமாக இருந்தது. அதற்கு எழுந்த விமர்சனங்களுக்கு பிறகு எனது பலவீனங்களை சரி செய்ய பயிற்சி எடுத்தேன். அதை சரி செய்தேன். நான் தற்போது அடைந்திருக்கும் நிலைமை அனைவருக்குமே தெரியும்.

சினிமா போலத்தான் கார் ரேஸிங்கிலும் காயங்கள் உண்டாகும். ஆனால், பயிற்சி எடுப்பேன், விரைவாக கற்றுக்கொள்வேன். எனக்கு 54 வயதாகிறது. எனினும் என்னால் முடிந்தவரை கார் ரேஸை தொடர விரும்புகிறேன். கடவுளின் கருணையால் எனக்கு உடல்நிலை நன்றாக இருக்கிறது. பெரிய அளவில் காயங்களின்றி உடன் பணிபுரிபவர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒத்துழைப்பால் சிறப்பாக இருக்கிறேன்.

கார் ரேஸிங்கில் அஜித்குமார் கார் ரேஸிங் நிறுவனத்தை ஈடு இணையற்ற ஒன்றாக மாற்றுவதே தனது விருப்பம். என்னைக் குறித்து மற்றவர்களின் விமர்சனங்களால் என்னை நானே மதிப்பிட்டுக்கொள்ள மாட்டேன். நான் வெற்றியாளராக இருக்க விரும்புகிறேன். எனது கடைசி காலத்தில் நான் முயற்சித்தேன், நான் ஏதோ செய்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைவேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *