பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த்!

கன்னட சினிமாவின் பிரபலமான நடிகையாக இருப்பவர் ருக்மணி வசந்த். இவர் தற்போது தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார். அந்த வகையில், இவரது நடிப்பில் கடந்த மாதம் ஏஸ் படம் வெளியானது. விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
மேலும் தெலுங்கு சினிமாவிலும் அடியெடுத்து வைத்துள்ள இவர், பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். அதாவது, பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த நடிக்க உள்ளார். பிரமாண்ட ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் உள்ளதால் ருக்மணி வசந்தை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. நடிகை ருக்மணி வசந்த் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது.