திருமண பெயரில் பல லட்சங்கள் ஏமாற்றிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை… பரபரப்பு புகார்

பாண்டியன் ஸ்டோர்ஸ்
தமிழ் சின்னத்திரையில் ஒரு சீரியல் பல வருடங்களாக ஓடுகிறது என்றால் அதற்கு ரசிகர்களின் ஆதரவு பெரிய அளவில் உள்ளது என அர்த்தம்.
அப்படி விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஒளிபரப்பான ஒரு தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். தற்போது இந்த சீரியலின் 2ம் பாகம் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
மோசடி புகார்
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ், பொன்னி போன்ற தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை ரிஹானா மீது திருமண மோசடி புகார் எழுந்துள்ளது.
அந்த புகாரில், சென்னை பூந்தமல்லி காவல் நிலையத்தில் ராஜ் கண்ணன் என்கிற தொழிலதிபர், ரிஹானாவிற்கு ஏற்கனவே ஹபிபுல்லா என்பவர் உடன் திருமணம் நடந்திருக்கிறது.
ஆனால் அவரை விவாகரத்து செய்யாமல் தன்னை திருமணம் செய்து கொண்டது தனக்கு பின்னர் தான் தெரியவந்தது. ரிஹானாவுக்கு ரூ.9 லட்சமும், அதன்பின்னர் சிறுக சிறுக 9.5 லட்சமும் பணம் ஆன்லைன் மூலம் கொடுத்திருக்கிறேன்.
சின்னத்திரையில் நடிக்க வேண்டும் என்பதால், பலருடன் பழக வேண்டும், இதையெல்லாம் கண்டும் காணாமல் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தினார் என அந்த புகாரில் ராஜ் கண்ணப்பன் கூறியிருக்கிறார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் நடிகை ரிஹானா, அவரது தாயார் மற்றும் அவரது முன்னாள் கணவரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.