”ஒரு நேரத்தில் ஒரு படம்தான்…மற்றவர்களைபோல 4 படங்களில் நடித்ததில்லை” – கஜோல்|”Never Worked For 20-30 Hours”

சென்னை,
பிரபல பாலிவு நடிகை கஜோல், ஒரு படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டுதான் அடுத்த படத்தைத் துவங்குவேன் என்று கூறி இருக்கிறார்.
கஜோல் தற்போது ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் ‘மா’ படத்தில் நடித்துள்ளார். விஷால் பியூரியா இயக்கும் இப்படத்தை அஜய் தேவ்கன் மற்றும் ஜோதி தேஷ்பாண்டே தயாரித்திருக்கின்றனர்.
இத்திரைப்படம் வருகிற 27-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தநிலையில், இப்படத்தின் புரமோஷனில் பேசிய கஜோல், ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டும்தான் நடிப்பதாக கூறினார். அவர் கூறுகையில்,
“ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டும் பணிபுரியும் சிலரில் நானும் ஒருவர். மற்றவர்களைபோல ஒரே நேரத்தில் 4 படங்களில் நடித்ததில்லை. நான் ஒரு படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டுதான் அடுத்த படத்தைத் தொடங்குவேன். 20 -30 மணிநேரம் பணிபுரிந்தது இல்லை. ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே பணிபுரிய வேண்டும் என்பதில் நான் எப்போதும் தெளிவாக இருக்கிறேன்” என்றார்.