திடீரென சம்பளத்தை உயர்த்திய நடிகை ஸ்ரீலீலா!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. இவர் 2019-ம் ஆண்டு வெளியான ‘கிஸ்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியை அளித்தது. இதையடுத்து அவருக்கு கன்னடத்தில் வாய்ப்புகள் குவிந்தன. இவர் தற்போது பவன்கல்யாண், நந்தமுரி பால கிருஷ்ணா, விஜய் தேவரகொண்டா ஆகியோர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் ,’குர்ச்சி மாடதபெட்டி’, ‘கிஸ்சிக்’ ஆகிய பாடல்களில் தனது துடிப்பான நடனத்தால் ரசிகர்களைக் கிறங்கடித்துள்ளார்.
இவர் கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக புதிய இந்தி படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்திலும் நடித்து வருகிறார்.
பான் இந்தியா அளவில் ‘சென்சேஷனல்’ நடிகையாக மாறி போயிருக்கும் ஸ்ரீலீலா, ‘பராசக்தி’க்கு பிறகு தொடர்ந்து தமிழில் படங்கள் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரீலீலா இதுவரை ஒரு படத்துக்கு சம்பளமாக ரூ.3 கோடி வாங்கி வந்தார். தற்போது அவர் சம்பளத்தை உயர்த்தியுள்ளார். அந்தவகையில் ஸ்ரீலீலாவின் சம்பளம் ரூ.4½ கோடியாக உயர்ந்திருக்கிறது. திடீரென ஸ்ரீலீலா சம்பளத்தை உயர்த்தியிருப்பது அனைவரையுமே யோசிக்க வைத்துள்ளது. தற்போது தெலுங்கில் 4 படங்களும், இந்தி மற்றும் கன்னடத்தில் தலா ஒரு படமும் ஸ்ரீலீலா கைவசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.