நடிகர் அஜித் மற்றும் ஷாலினியை நேரில் சந்தித்த முன்னணி நடிகர்.. யார் தெரியுமா! புகைப்படம் இதோ

அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் அஜித் இந்த ஆண்டு இரண்டு திரைப்படங்கள் கொடுத்தார். அதில் விடாமுயற்சி எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்றாலும் குட் பேட் அக்லி திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
உலகளவில் ரூ. 285 கோடிக்கும் மேல் வசூல் செய்து, அஜித்தின் கரியர் பெஸ்ட் படமாகியுள்ளது. இதை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்தான் தனது 64வது படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். விரைவில் இப்படத்திற்கான அறிவிப்பு வெளிவரும் என திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அஜித், ஷாலினியை சந்தித்த சதீஸ்
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சதீஸ். இவர் தற்போது நகைச்சுவை கதாபாத்திரங்களில் இருந்து விலகி முழுமையாக ஹீரோவாக நடித்து வருகிறார். கான்ஜுரிங் கண்ணப்பன், சட்டம் என் கையில் என ஹீரோவாக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி நடிகை ஷாலினியை நடிகர் சதீஸ் நேரில் சந்தித்துள்ளார். அப்போது இருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..
A sweet surprise from #Ajith sir 😍
Such a humble and a gentle human being🙏🏻
Love u sir and Shalini anni ❤️ pic.twitter.com/3SwOpdTFIB— Sathish (@actorsathish) June 16, 2025