விஜய் தேவரகொண்டா குறித்த கேள்விக்கு நடிகை ராஷ்மிகா அளித்த பதில் வைரல்

ஐதராபாத்,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது மும்பை தாராவியை மையமாக வைத்து அரசியல் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ராஷ்மிகா, ஜிம் சரப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.
படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழுவினர் படத்தின் புரமோஷன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ‘குபேரா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
ஐதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக குபேரா பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, சேகர் கம்முலா ஆகியோருடன் இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி ஆகியோர் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தெலுங்கு டிரெய்லரை இயக்குநர் ராஜமௌலி வெளியிட்டார். இதையடுத்து நீண்ட நேரத்திற்கு பிறகு ஆன்லைனில் அனைத்து மொழிகளிலும் டிரெய்லர் வெளியானது.
குபேரா பிரீ ரிலீஸ் நிகழ்வில் விஜய் தேவரகொண்டா குறித்து கேட்கப்பட்ட கேள்வியால் நடிகை ராஷ்மிகா மந்தனா வெட்கத்தில் முகம் சிவந்தார். நிகழ்ச்சியில் தனுஷ் மற்றும் நாகர்ஜூனாவிடம் இருந்து எந்த விஷயங்களை எடுத்துக்கொள்ள விரும்புகிறீர்கள் என்று ராஷ்மிகாவிடம் கேள்விக்கு “நாகர்ஜூனாவின் வசீகரத்தையும் தனுஷின் நடிப்பு, இயக்கம், நடனத்தையும் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்” என்று தெரிவித்தார். இதனையடுத்து, விஜய் தேவரகொண்டாவிடம் என்று கேள்விக்கு ‘அனைத்தையும் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்’ என்று ராஷ்மிகா தெரிவித்தார். விஜய் தேவரகொண்டா குறித்த கேள்விக்கு நடிகை ராஷ்மிகா அளித்த பதில், இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் காதலித்து மற்றும் ஒன்றாக டேட் செய்து வருகின்றனர் என்ற தகவல் ‘டியர் காமரேட்’ திரைப்பட நாட்களில் இருந்தே பரவி வருகின்றன. அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பொது இடங்களுக்கு செல்வது, சுற்றுலா தளங்களுக்கு சென்று வந்தது இதனை உறுதிப்படுத்துவதாக இருந்தது.