இந்த போட்டோவில் இருப்பது யார் தெரியுமா? மணிரத்னம் பட ஹீரோயின் தான்

இன்று தந்தையர் தினம் என்பதால் பிரபலங்கள் பலரும் தங்களது தந்தையின் போட்டோக்களை பதிவிட்டு உருக்கமாக பேசி வருகிறார்கள்.
அப்படி பல சினிமா நட்சத்திரங்களும் தங்களது சின்ன வயது போட்டோக்களை பதிவிட்டு அப்பா பற்றியும், பழைய நினைவுகளை பற்றியும் தெரிவித்து இருக்கின்றனர்.
அதிதி ராவ்
நடிகர் சித்தார்த்தின் மனைவி அதிதி ராவ் தான் சின்ன வயதில் அப்பாவுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அதிதி ராவ் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் போன்ற படங்களில் நடித்து தமிழில் புகழ் பெற்றவர், கடந்த வருடம் தான் அவர் நடிகர் சித்தார்த்தை காதல் திருமணம் செய்தார்.
அதிதி ராவ் சின்ன வயது போட்டோவில் ஆண்கள் போல முடி வெட்டிக் கொண்டு இருக்கிறார். அப்படி வெட்டிவிட்டது தனது அம்மா தான் என்றும் அவர் கூறியிருக்கிறார்.