''96'' படத்தின் 2ம் பாகம் – இயக்குனர் பகிர்ந்த முக்கிய அப்டேட்

சென்னை,
விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் மிகவும் வரவேற்பை பெற்ற ”96” படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருக்கிறது.
அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும்நிலையில், இயக்குனர் பிரேம் குமார் ”96” படத்தின் 2-ம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகள் முடிந்துவிட்டதாக கூறி இருக்கிறார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய பிரேம் குமார், ஸ்கிரிப்ட் பணிகளை முடித்துவிட்டதாகவும், விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மற்ற தகவல்கள் எதுவும் வெளியாகாதநிலையில், ராம் மற்றும் ஜானுவின் கதை அடுத்து எங்கு செல்கிறது என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.