வைரலாகும் லால் சலாம் நடிகையின் '8 வசந்தலு' பட டிரெய்லர்

சென்னை,
மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ‘8 வசந்தலு’ என்ற படத்தை தயாரித்துள்ளது. பனீந்திர நரசெட்டி இயக்கி இருக்கும் இப்படத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருந்த அனந்திகா சனில்குமார் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், ரவி தேஜா துக்கிராலா, சுமந்த் நிட்டூர்கர், ஹனு ரெட்டி, கண்ணா பசுநூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
“8 வசந்தலு” படத்தின் 2 டீசர்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தநிலையில், தற்போது டிரெய்லர் வெளியாகியுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் படம் வருகிற 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.