அடேங்கப்பா ஒரே ஒரு விளம்பரம், வாய் பிளக்கும் அளவு சம்பளம் வாங்கிய ஜுனியர் என்.டி.ஆர்… எத்தனை கோடி?

விளம்பரம்
தென்னிந்திய சினிமா ரசிகர்கள் பலரும் விளம்பரங்கள் நடிக்கிறார், அதன் மூலமாகவும் பெரிய அளவில் சம்பாதிக்கிறார்கள்.
கடந்த சில வருடங்களாக ஜெயம் ரவி அதிக விளம்பரங்கள் நடிக்க ஆர்வம் காட்டிவருவது நன்றாக தெரிகிறது.
தற்போது ஒரு தெலுங்கு சினிமா நடிகர் விளம்பரத்திற்காக நடிகைகள் வாங்கும் சம்பளத்திற்கு இணையாக பல கோடி வாங்கியுள்ளார்.
யார் அவர்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் தான் ஜுனியர் என்.டி.ஆர்.
கடைசியாக இவரது நடிப்பில் தேவாரா என்ற படம் வெளியாகி இருந்தது. இந்தப் படம் இந்தியாவை தாண்டி ஜப்பானில் செம வரவேற்பு பெற்று மாஸ் கலெக்ஷனும் பெற்றது.
தற்போது ஜுனியர் என்.டி.ஆர், மெக்டொனால்ட்ஸ் மெக்ஸ்பைசி சிக்கன் விளம்பரத்தின் தூதராக ஜுனியர் என்.டி.ஆர் நியமிக்கப்பட்டுள்ளாராம்.
இந்த விளம்பரத்திற்காக அவர் பெற்ற தொகை இப்போது உள்ள டாப் நாயகியான நயன்தாரா ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்திற்கு இணையாக வாங்கியுள்ளாராம்.
ஒரு சிக்கன் லெக் பீஸ் விளம்பரத்திற்காக அவர் சுமார் ரூ. 7 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.