மாஸ் கம்பேக் கொடுத்துள்ள அனுஷ்கா.. மிகப்பெரிய தொகைக்கு படத்தை வாங்கிய OTT நிறுவனம்

மாஸ் கம்பேக் கொடுத்துள்ள அனுஷ்கா.. மிகப்பெரிய தொகைக்கு படத்தை வாங்கிய OTT நிறுவனம்

அனுஷ்கா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் அனுஷ்கா. இவர் தமிழில் வெளிவந்த இரண்டு படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து வானம், வேட்டைக்காரன், லிங்கா, சிங்கம் போன்ற பல சூப்பர்ஹிட் படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார்.

ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இடம்பிடித்த இவருக்கு இந்திய அளவில் பாகுபலி படம் வரவேற்பை பெற்று தந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து காணாமல்போய்விட்டார். உடல் எடை கூடியதுதான் இவருடைய சரிவுக்கு காரணம் என திரையுலகில் பேசப்படுகிறது.

மாஸ் கம்பேக் கொடுத்துள்ள அனுஷ்கா.. மிகப்பெரிய தொகைக்கு படத்தை வாங்கிய OTT நிறுவனம் | Anushka Shetty Ghaati Movie Ott Rights

ஆனால், தற்போது செம மாஸ் கம் பேக் கொடுக்கவுள்ளார். இயக்குநர் க்ரிஷ் ஜகராளமுடி இயக்கத்தில் உருவாகி வரும் ’காட்டி’ படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோயினாக சோலோவாக களமிறங்கியுள்ளார். இப்படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணன், ஜெகபதி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் வெளிவந்து அமோக வரவேற்பை பெற்றது. இப்படியொரு கதாபாத்திரத்தில் இதுவரை அனுஷ்காவை பார்த்ததே இல்லையே என ரசிகர்கள் கமன்ட் செய்து வந்தனர்.

OTT உரிமை

இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கும் அனுஷ்காவின் ’காட்டி’ படத்தின் OTT உரிமை ரூ. 36 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மாஸ் கம்பேக் கொடுத்துள்ள அனுஷ்கா.. மிகப்பெரிய தொகைக்கு படத்தை வாங்கிய OTT நிறுவனம் | Anushka Shetty Ghaati Movie Ott Rights

தெலுங்கு திரையுலகில் சோலோ ஹீரோயின் கதையில் உருவாகி, அதிக விலைக்கு OTT-யில் விற்பனை ஆனது இப்படம்தானாம். அந்த சாதனையை அனுஷ்கா படைத்துள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர். 

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *