சினிமாவை விட்டு போகிறேன்.. இயக்குனர் மிஷ்கின் பேச்சால் அதிர்ச்சி

இயக்குனர் மிஷ்கின் கடந்த சில வருடங்களாக எந்த படமும் இயக்காமல் இருந்த நிலையில் தற்போது பிசாசு 2, ட்ரெயின் ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.
“அந்த படங்களுக்கு பிறகு மிஷ்கின் சினிமாவில் இருந்து காணாமல் போய்விடுவார் என பேசுகிறார்கள்” என மிஷ்கின் இன்று நடந்த பட விழாவில் பேசி இருக்கிறார்.
‘நானும் சினிமாவை விட்டு போக வேண்டும் என்று தான் நினைக்கிறேன்’ எனவும் அவர் கூறி இருக்கிறார்.
5 லட்சம் கொடுங்க
“என்னை பட விழாக்களுக்கு அழைக்கிறார்கள், என்னை தயவு செஞ்சு அழைக்காதீங்க.”
“அப்படி கூப்பிட்டால் ஒரு 5 லட்சம் கொடுங்க, அதை வைத்து என் மகளை படிக்க வைப்பேன்” என மிஷ்கின் கேட்டிருக்கிறார்.