திரிவிக்ரம் – ராம் சரண் படம் குறித்து பரவும் தகவல்: தயாரிப்பாளர் மறுப்பு

சென்னை,
சமீப நாட்களாக, இயக்குனர் திரிவிக்ரம் , ராம் சரணுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் பவன் கல்யாண் தனது பவன் கல்யாண் கிரியேட்டிவ் ஒர்க்ஸ் பேனரில் கீழ் வழங்க உள்ளதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில், தயாரிப்பாளர் நாக வம்சி இந்த தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். தனது சமூக வலைதள பக்கத்தில், இதுபோன்ற எந்த படமும் தயாரிப்பில் இல்லை என்று தெளிவுபடுத்தி, பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மேலும் இயக்குனர் திரிவிக்ரம் சாரின் அடுத்த 2 படங்கள் வெங்கடேஷ் மற்றும் என்.டி.ஆருடன் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “திரிவிக்ரம் சாரின் அடுத்த 2 படங்கள் வெங்கடேஷ் மற்றும் ஜூனியர் என்.டி.ஆருடன். மற்ற அனைத்தும் வெறும் வதந்தி” இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.