அமீர்கானின் 'சித்தாரே ஜமீன் பர்' பட தமிழ் டிரெய்லர் வெளியீடு!

சென்னை,
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் அமீர்கான். இவர் தற்போது ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் ‘சித்தாரே ஜமீன் பர்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில், அவருடன் நடிகை ஜெனிலியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இப்படம் வருகிற ஜூன் மாதம் 20-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், தற்போது இப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. அமீர் கான் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்து சிறிது காலம் ஆகிவிட்டது. அவரது கடைசி இரண்டு படங்களான ‘லால் சிங் சத்தா’ மற்றும் ‘தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்’ ஆகியவை பெரும் ஏமாற்றங்களை அளித்தன.
இதனால் அனைவரின் கண்களும் ‘சீத்தாரே ஜமீன் பர்’ மீது உள்ளது. இப்படம் அமீர்கானின் கம்பேக் படமாக இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.