கேரவனில் தனுஷ் நடந்துகொள்ளும் விதத்தை பற்றி கூறிய அமலா பால்.. என்ன சொன்னார் தெரியுமா

கேரவனில் தனுஷ் நடந்துகொள்ளும் விதத்தை பற்றி கூறிய அமலா பால்.. என்ன சொன்னார் தெரியுமா

தனுஷ் 

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா மட்டுமின்றி உலகளவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக குபேரா திரைப்படம் வெளிவரவுள்ளது. சேகர் கம்முலா இயக்கியுள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 20ம் தேதி ரிலீசாகிறது.

இப்படத்தை தொடர்ந்து இட்லி கடை, Tere isqh mein ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

நடிகர் தனுஷின் திரை வாழ்க்கையில் மிகமுக்கியமான திரைப்படங்களில் ஒன்று வேலையில்லா பட்டதாரி. இது அவருடைய 25வது திரைப்படமாகும். இப்படம் ப்ளாக் பஸ்டர் வெற்றியை தனுஷுக்கு தேடி தந்தது.

கேரவனில் தனுஷ் நடந்துகொள்ளும் விதத்தை பற்றி கூறிய அமலா பால்.. என்ன சொன்னார் தெரியுமா | Amala Paul Talk About Dhanush And Vip Experience



இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார். இந்த நிலையில், வேலையில்லா பட்டதாரி படத்தின் சமயத்தில் நடந்த அனுபவத்தை நடிகை அமலா பால் சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.

அமலா பால் பகிர்ந்து விஷயம்



இதில் “வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருதேன். அப்போதில் நடிக்கபோது, அனைவரும் கேரவனில் சேர்ந்து ஒன்றாக தான் சாப்பிடுவோம். தனுஷ் பார்க்கத்தான் ஒல்லியாக இருக்கிறார். ஆனால், அவர் நிறையவே சாப்பிடுவார்.

அவர் முழுக்க முழுக்க சைவ உணவு சாப்பிடுவார். அதே சமயம் முட்டை மட்டும் அசைவத்தில் விரும்பி சாப்பிடுவார். அதேபோல் சாப்பிடும்போது அவருக்கு ஒரு உள்ளது.

கேரவனில் தனுஷ் நடந்துகொள்ளும் விதத்தை பற்றி கூறிய அமலா பால்.. என்ன சொன்னார் தெரியுமா | Amala Paul Talk About Dhanush And Vip Experience

அவர் கவுண்டமணியின் மிகப்பெரிய ரசிகர். எனவே சாப்பிடும்போது கேரவனில் இருக்கும் டிவியில் கவுண்டமணி சாரின் நகைச்சுவை காட்சிகளை போட்டுவிடுவார். அதை பார்த்துக்கொண்டேதான் சாப்பிடுவார்” என்று அமலா பால் கூறியுள்ளார்.

தனுஷ் குறித்து அமலா பால் பகிர்ந்து இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *