கன்னட நடிகர் சிவராஜ் குமாரை வாழ்த்திய கமல்ஹாசன்… என்ன விஷயம் தெரியுமா?

கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜுன் 5ம் தேதி வெளியான திரைப்படம் தக் லைஃப்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன், சிம்பு, த்ரிஷா, அபிராமி என பலர் நடித்த இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசுகையில், தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல்ஹாசன் இப்படி பேசியதற்கு கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கன்னட மக்கள் போராட்டம் செய்தனர்.
இதனால் தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகவே இல்லை, நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
வாழ்த்து
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன், கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
அதில் அவர், திரைத்துரையில் 40வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள கன்னட நடிகர் சிவராஜ் குமாருக்கு நடிகர் கமல்ஹாசன் கன்னடத்தில் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், சிவான்னாவுக்கு நான் சித்தப்பா மாதிரி, ராஜ்குமார் அண்ணா எனக்கு காட்டிய அன்பு எதிர்ப்பாராத அன்பு. சிவான்னாவை பொருத்தவரை இந்த 40 வருஷம் எப்படி ஓடியதென்று எனக்கு தெரியவில்லை.
இன்று மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்து சாதித்துக் கொண்டிருக்கிற விஷயம், இனியும் சாதிக்கக்கூடிய விஷயம், எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.