''அது என்னுடைய கனவுகளில் ஒன்று – சவுந்தர்யா ஷர்மா

மும்பை,
பல் மருத்துவராக இருந்து தற்போது நடிகையாக மாறி இருப்பவர் சவுந்தர்யா ஷர்மா. பிக் பாஸ் 16-ல் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய பிறகு, தற்போது அவர் ”ஹவுஸ்புல் 5” என்ற நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி இருக்கிறார்.
இந்தப் படத்தில் ”லூசி” என்ற கேரக்டரில் நடிகை சவுந்தர்யா ஷர்மா நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். இந்நிலையில், ‘தென்னிந்திய மொழி படங்களில் நடிப்பதும் எனது முக்கிய கனவுகளில் ஒன்று’ என்று கூறியுள்ளார். இதன் மூலம் விரைவில் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.