அவருடைய ரோல் ‘மாமன்’ படத்துக்கு கிடைத்த மேஜிக்கல் கிப்ட் – நடிகர் சூரி | His role in ‘Maaman’ was a magical gift

அவருடைய ரோல் ‘மாமன்’ படத்துக்கு கிடைத்த மேஜிக்கல் கிப்ட் – நடிகர் சூரி | His role in ‘Maaman’ was a magical gift


சென்னை,

சூரி நடிப்பில் பிரசாந்த் பண்டிராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான படம் ‘மாமன்’. லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். அக்காவாக சுவாசிகா நடித்துள்ளனர். மேலும் ராஜ்கிரண், பால சரவணன், பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் நடிகர் சூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் நடிகர் விமலை பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில், “விமல் என் வாழ்க்கையில் வரம் போல வந்தவர். உண்மையான நண்பனும், உறவாகவும், நம்பிக்கையாகவும் இருக்கிறார். எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும், ஒரே ஒரு காட்சிக்காக, எதையும் எதிர்பார்க்காமல் அன்புக்காக வந்தது அவருடைய மனிதத்தன்மையைச் காட்டும் சிறந்த எடுத்துக்காட்டு.

அவருடைய தோற்றம் மாமன் படத்துக்கு கிடைத்த ஒரு மேஜிக்கல் கிப்ட். அந்த சிறு காட்சி, எப்போதும் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடிக்கும். உங்களுடைய அன்புக்கும், நேர்மையான மனதுக்கும், எங்களுக்காக எடுத்த நேரத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *