புதிய ரிலீஸ் தேதி எப்போது? – ”ஹரி ஹர வீர மல்லு” படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு|Hari Hara Veera Mallu team: Ignore speculative dates

புதிய ரிலீஸ் தேதி எப்போது? – ”ஹரி ஹர வீர மல்லு” படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு|Hari Hara Veera Mallu team: Ignore speculative dates


சென்னை,

பவன் கல்யாண் நடித்துள்ள ”ஹரி ஹர வீரமல்லு” படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த ஊகங்களுக்கு மத்தியில், சரிபார்க்கப்படாத தகவல்களை பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் புறக்கணிக்குமாறு முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குழு தெளிவுபடுத்தியுள்ளது. அதுவரை, ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் ரிலீஸ் தேதி பற்றிய தவறான தகவகளை பரப்புவதையோ அல்லது பகிர்வதையோ தவிர்க்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “”ஹரி ஹர வீரமல்லு” படத்தின் புதிய ரிலீஸ் தேதி என்று தற்போது ஆன்லைனில் பரவி வரும் தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். புதிய அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி சில நாட்களில் அறிவிக்கப்படும். அதுவரை உங்களில் அன்பும் ஆதரவும் எங்களுக்கு தேவை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *