கீர்த்தி சுரேஷுக்கு திருமணம்.. வெளியான புகைப்படம்- யாரெல்லாம் போயிருக்காங்க பாருங்க

32 வயதாகும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு இன்றைய தினம் கோவாவில் திருமணம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
நடிகை கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகர்களில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் கீர்த்தி சுரேஷிற்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, விஷால் என கோலிவுட் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்து விட்டார். தற்போது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ் பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.
தேசிய விருது வாங்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தனக்குள் இருக்கும் மொத்த காதலையும் சினிமாவில் காட்டி நடித்து வருகிறார்.
திருமண வரவேற்பு புகைப்படம்
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் திருமணம் இன்றைய தினம் கோவாவில் மிக பிரமாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த சமயத்தில் கீர்த்தி சுரேஷின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து புகைப்படமொன்று வெளியிட்டுள்ளார்.
இதன்படி, தற்போது திருமண வரவேற்பு பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் மணமக்களின் பெயர் கொண்ட பேனர் புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்.
புகைப்படத்தை பார்த்த கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். அத்துடன் கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் கோலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |