"ஒரு கப் டீ..பார்லேஜி" எனக்கு இது போதும்! வைரலாகும் பூஜா ஹெக்டே பதிவு

தென்னிந்திய சினிமாவின் முன்னனி நடிகை பூஜா ஹெக்டே. இவர் தமிழில் ‘முகமூடி மற்றும் பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றார். இவரது நடிப்பில் சமீபத்தில் ‘ரெட்ரோ’ படம் வெளியானது. அதனை தொடர்ந்து தற்போத விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
இந்நிலையில் பார்லே- ஜி பிஸ்கட் தொடர்பான தனது சுவையான நினைவுகளை பகிர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூஜா ஹெக்டே வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “சில விஷயங்கள் நம்மை வீட்டில் இருப்பதை போல உணரவைக்கும். அதில் ஒன்று தான், பார்லே- ஜி பிஸ்கட்டை டீ-யில் நனைத்து சாப்பிடுவது” என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.