'மெட்ராஸ் மேட்னி' சினிமா விமர்சனம்

'மெட்ராஸ் மேட்னி' சினிமா விமர்சனம்


சென்னை,

துப்பறியும் நாவல்கள் எழுதும் சத்யராஜுக்கு, சாமானியரின் வாழ்க்கை கதையை எழுத சவால் வருகிறது. சவாலை ஏற்கும் சத்யராஜ், ஆட்டோ டிரைவரான காளி வெங்கட்டின் கதையை எழுத (சொல்ல) தொடங்குகிறார். ஆட்டோ ஓட்டி கிடைக்கும் சொற்ப வருமானத்தில் மனைவி, மகன், மகளை காப்பாற்றி வருகிறார் காளி வெங்கட். மோசமான பொருளாதார சூழலில் பல்வேறு மனக்கசப்புகளுக்கு இடையே குடும்பத்தை நடத்துகிறார். தனது பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை கருதி, சில முயற்சிகளை காளி வெங்கட் மேற்கொள்கிறார். அது பலித்ததா? என்பதே மீதி கதை.

நையாண்டி பேச்சாலும், யோசிக்க வைக்கும் வசனங்களாலும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே ரசிக்க வைக்கிறார் சத்யராஜ். அவரது மனநிலையை மாற்ற செய்யும் எதார்த்த வாழ்வியல் ரசிப்பு. உடல் மொழியாலும், முக பாவனைகளாலும் ‘மிடில் கிளாஸ்’ குடும்பத் தலைவனாக பக்காவாக பொருந்தி இருக்கிறார் காளி வெங்கட்.

குறைவான வசனங்களையே பேசினாலும் யதார்த்தமான நடிப்பால் ஷெல்லி மனதில் பதிகிறார். ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பால் அலங்கரிக்கிறார் ரோஷினி ஹரிப்ரியன். விஷ்வா, சுனில் சுகாதே, அர்ச்சனா, மதுமிதா, கீதா கைலாசம், மரியம் ஜார்ஜ், ராமர் என அனைவருமே தங்கள் கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.

ஜி.கே.ஆனந்தின் ஒளிப்பதிவு சுவாரசியம் சேர்க்கிறது. கே.சி.பாலசாரங்கனின் இசை ஓ.கே. ரகம். திரை கலைஞர்களின் நேர்த்தியான நடிப்பு பலம் சேர்த்தாலும், திருப்பங்களும், பரபரப்பும் இல்லாத திரைக்கதை பலவீனமாக அமைகிறது. கதாபாத்திரங்களின் ஒவ்வொரு அசைவுக்கும், சத்யராஜ் பின்னணியில் பேசுவதை தவிர்த்து இருக்கலாம்.

வழக்கமான கதைக்களம் என்றாலும், அதில் சின்ன சின்ன சுவாரசியங்களை கூட்டி ரசிக்கும்படியான படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் கார்த்திகேயன் மணி.

மெட்ராஸ் மேட்னி – குட் பேமிலி.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *