‘கட்டாளன்’ படத்தில் இணைந்த சுனில், கபீர் துஹான் சிங்|Sunil, Kabir Duhan Singh join Anthony Varghese in pan-Indian action thriller ‘Kattalan’

சென்னை,
‘மார்கோ’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்பு, தயாரிப்பாளர் ஷரீப் முஹமது தற்போது ‘கட்டாளன்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ் பெப்பே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பால் ஜார்ஜ் இயக்குகிறார். ‘காந்தாரா’ படத்திற்கு இசையமைத்து பாராட்டப்பட்ட இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத், இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில், பான் இந்தியா அளவில் உருவாகி வரும் இப்படத்தில் தற்போது சுனில், கபீர் துஹான் சிங் இணைந்திருகிறார்கள்.