தண்ணீரில் விளக்கேற்றுவது எப்படி? இது தெரிஞ்சா கார்த்திகை தீபத்துக்கு எண்ணெய் செலவே இருக்காது

தண்ணீரில் விளக்கேற்றுவது எப்படி? இது தெரிஞ்சா கார்த்திகை தீபத்துக்கு எண்ணெய் செலவே இருக்காது

பொதுவாகவே நமது முன்னோர்கள் பின்பற்றிய ஒவ்வொரு விடயத்துக்கும் ஒரு அறிவியல் காரணம் இருக்கும். இதுமட்டுமன்றி மக்களின் நலன் கருதியே அதனை செய்திருப்பார்கள்.

இந்த வகையில் இந்து மதத்தில், ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்த பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினத்தில் கார்த்திகை நட்சத்திரம் வருவதினால் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகின்றது.

தண்ணீரில் விளக்கேற்றுவது எப்படி? இது தெரிஞ்சா கார்த்திகை தீபத்துக்கு எண்ணெய் செலவே இருக்காது | How To Make Water Lamp At Home Karthigai Deepam

வருடத்தில் கார்த்திகை மாதத்தில் பகல் நேரம் குறைவாக இருப்பதால், நமது தினசரி வேலைகளை செய்ய நமக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாக வெளிச்சம் தேவைப்படும் என்பதால். முன்னோர்கள் கார்த்திகை மாதத்தில், எப்போதும் ஏற்றுவதை விட இரண்டு மடங்கு அதிகமாக தீபம் ஏற்றுவார்கள்.

மற்றொரு காரணம் என்னவென்றால்,  கார்த்திகை மாதம் சாஸ்திரங்களின் அடிப்படையில் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.  ஒளியை பெருக்கிக் கொள்ளும் நேரம் இது என்பதால் இந்த நாட்களில் தீபம் ஏற்றப்படுகின்றது.

தண்ணீரில் விளக்கேற்றுவது எப்படி? இது தெரிஞ்சா கார்த்திகை தீபத்துக்கு எண்ணெய் செலவே இருக்காது | How To Make Water Lamp At Home Karthigai Deepam

இந்த ஆண்டின் கார்த்திகை தீப திருநாள் டிசம்பர் 13 ஆம் திகதி வருகின்றது.கார்த்திகை தீபம் ஏற்றும் நாட்களில் அகல் விளக்குகளை ஏற்றுவதால் அதற்கு அதிகமாக எண்ணெய்யை செலவு செய்ய வேண்டி ஏற்படுகின்றது. 

ஆனால் தண்ணீர் கொண்டே சூப்பராக விளக்கு ஏற்றலாம் என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா? எப்படி தண்ணீரை பயன்படுத்தி அதிக எண்ணெய் செலவு இன்றி தீபம் ஏற்றலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

சிறிய கண்ணாடி டம்ளர் அல்லது சிறிய கண்ணாடி பௌல்  (எவ்வளவு விளக்கு வேண்டுமோ இவ்வளவு எடுத்துக்கொள்ளலாம்)

பிளாஸ்டிக் பாட்டில் மூடி (எத்தனை விளக்கு வேண்டுமோ அத்தனை மூடியை எடுக்கவும்)

பஞ்சு திரி 

தண்ணீர் 

மஞ்சள் தூள் 

விளக்கேற்றும் எண்ணெய் 

ரோஜாப்பூ இதழ்கள் 

தண்ணீரில் விளக்கேற்றுவது எப்படி? இது தெரிஞ்சா கார்த்திகை தீபத்துக்கு எண்ணெய் செலவே இருக்காது | How To Make Water Lamp At Home Karthigai Deepam

செய்முறை

முதலில் கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால்வாசி அளவுக்கு தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த தண்ணீரில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து அதன் மேற்பரப்பில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக்கொள்ள வேண்டும்.

தண்ணீரில் விளக்கேற்றுவது எப்படி? இது தெரிஞ்சா கார்த்திகை தீபத்துக்கு எண்ணெய் செலவே இருக்காது | How To Make Water Lamp At Home Karthigai Deepam

பின்னர் ஒரு பாட்டில் மூடியை எடுத்து, ஒரு சிறிய துளையிட்டுக் எண்ணெயில் நனைத்த திரியை துளையில் நுழைத்து, நீர் நிரப்பிய டம்ளரில் கவிழ்த்து மிதக்கவிட்டுக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து  மூடியைச் சுற்றி ரோஜாப்பூ இதழ்களைப் பரப்பிவிட்டால், விளக்கு தயார். இப்படி செய்து விளக்கேற்றினால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதுடன் குறைந்த எண்ணெயில் பெருமளவில் தீபங்களை ஏற்றி மகிழலாம். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *