Arya36 First Look Poster and Title Teaser Launch on June

Arya36 First Look Poster and Title Teaser Launch on June


சென்னை,

ஆர்யா வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். நான் கடவுள், மதராச பட்டினம், அவன் இவன், இரண்டாம் உலகம், மகாமுனி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்கள் ஆர்யா திறமையான நடிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்தன. இவர் தற்போது ‘மிஸ்டர் எக்ஸ்’ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து சார்பட்டா இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், ஆர்யாவின் 36-வது பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. .மினி ஸ்டூடியோஸ் வினோத் குமார் தயாரிக்கும் இப்படத்தை ‘ரன் பேபி ரன்’ படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார்.எம்புரான் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதிய முரளி கோபி இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். காந்தாரா படத்தின் இசையமைப்பாளர் அக்னிஷ் லோக்நாத் இசையமைக்கிறார். நாளை மறுநாள் மாலை 5 மணிக்கு படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் பெயர் டீசருடன் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *