Union MoS Suresh Gopi meets Malayalam actor Shine Tom Chacko in hospital

பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் ‘பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில், கொச்சியில் உள்ள ஓட்டலில் கஞ்சா விற்பனை செய்ததாக தஸ்லீமா என்பவரை போலீசார் கைது செய்தனர். அப்போது அந்த ஓட்டலில் இருந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ தப்பி ஓடினார். சிசிடிவி காட்சியின் அடிப்படையில் ஷைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்,
ஷைன் டாம் சாக்கோ தனது குடும்பத்தோடு காரில் பெங்களூரு நோக்கி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பாறையூர் அருகில் சென்று கொண்டிருந்தபோது, அவரது கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த அவரது தந்தை சி.பி சாக்கோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த ஷைன் டாம் சாக்கோ, அவரது தாயார் மரியா கார்மல் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் திருச்சூரிலுள்ள தனி்யார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்பட்டார்.
இந்த நிலையில் ஷைன் டாம் சாக்கோவை மத்திய மந்திரியும் நடிகருமான சுரேஷ் கோபி நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். ஷைன் டாம் சாக்கோவின் சகோதரிகள் இன்று இரவு கேரளா வருவதால் நாளை சி.பி.சாக்கோ இறுதிச்சடங்கு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.