அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி வெளியாகியிருந்த படம் ”வேதம்”.|When Anushka’s movie hoarding caused 40 road accidents

சென்னை,
அல்லு அர்ஜுன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் மஞ்சு மனோஜ் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி வெளியாகியிருந்தபடம் ”வேதம்”.
படம் வெளியாகி 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளநிலையில், அப்படத்தின் குழுவினர் வேதத்தின் அனுபவங்களை நினைவு கூர்ந்தனர். அப்போது ”வேதம்” இயக்குனர் கிரிஷ், படம் வெளியாவதற்கு முன்பு நடந்த ஒரு விசித்திரமான சம்பவத்தை கூறினார்.
அவர் கூறுகையில், “படத்தின் விளம்பரத்திற்காக அனுஷ்காவின் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை ஐதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா சர்க்கிளில் வைத்திருந்தோம். டிரைவர்கள் போஸ்டரைப் பார்ப்பதை நிறுத்த முடியாததால் 40க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்தன. போலீசார் அதை அகற்றுமாறு கூறினர். பிறகு நாங்கள் அதனை அகற்றினோம்’ என்றார்.
தற்போது அனுஷ்கா வேதம் இயக்குனர் கிரிஸுடன் ‘காதி’ படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார். இந்தப் படம் ஜூலை 11 அன்று வெளியாக உள்ளது.