கோவையில் என் காலடி படாத இடமே இல்லை” – இளையராஜா|”There is no place in Coimbatore that I have not set foot in

சென்னை,
இசைஞானி இளையராஜா தற்போது, படங்களுக்கு இசையமைப்பது குறைந்துள்ளது என்றாலும் அடிக்கடி சில இடங்களில் இசைக்கச்சேரிகளை நடத்தி மக்களை மகிழ்வித்து வருகிறார்.
அந்த வகையில் கோவையில் இளையராஜாவின் இசைக்கச்சேரி நாளை நடைபெறவுள்ளது. இதற்காக கோவை சென்றிருக்கும் இளையராஜா அங்கு ஒரு விருது வழங்கும் விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பெசுகையில்,
”கோவையில் என்னுடைய காலடி படாத இடமே கிடையாது. கோவையில் என் ஹார்மோனியம் ஒலிக்காத தெருவே கிடையாது. நான் பார்த்த கோவை வேறு. என்னுடைய ஹார்மோனியம் கோவையில் செய்யப்பட்டதுதான். இங்கிருந்து நான் வாங்கிய ஹார்மோனியத்தைதான் இன்றும் இசையமைக்கப் பயன்படுத்துகிறேன்.
கோவைக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு எனச் சொல்லமுடியாது. ஆனால், கோவையையும் என்னையும் பிரிக்க முடியாது” என்றார்.