சன் டிவியின் கயல் சீரியல் நடிகர்களின் சம்பள விவரம்.. யாருக்கு அதிகம், நாயகிக்கா?

கயல் சீரியல்
சன் தொலைக்காட்சி என்றால் சீரியல்களுக்கு பெயர் போன ஒன்று. இந்த தொலைக்காட்சியில் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட தொடர் தான் கயல்.
சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துவரும் இந்த தொடர் டிஆர்பியில் டாப் 5ல் இடம்பெற்று வருகிறது.
இப்போது கதையில் கயலை அவரது அண்ணி தவறாக நினைத்துக்கொண்டு சண்டை சண்டை என போட்டு வந்தார். நேற்றைய எபிசோடில் கயல் பணம் கொடுக்காதது எதனால் என்பது தெரியவர அவரது அண்ணி மிகவும் வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டார்.
சம்பளம்
பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகும் கயல் சீரியல் நடிகர், நடிகையின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது. ஒரு நாளைக்கு கயல் சீரியல் பிரபலங்கள் வாங்கும் சம்பள விவரத்தை காண்போம்,
- அன்பு, சுபகீதா- ரூ. 5 முதல் 8 ஆயிரம்
- ஷாலினி, ஆறுமுகம்- ரூ. 5 முதல் 8 ஆயிரம்
- விக்னேஷ், தேவி- ரூ. 10 ஆயிரம்
- காமாட்சி, ராஜலட்சுமி, சிவசங்கரி, மாலதி- ரூ. 10 முதல் 12 ஆயிரம்
- மூர்த்தி- ரூ. 12 முதல் ரூ. 15 ஆயிரம்
- எழில்- ரூ. 20 முதல் ரூ. 25 ஆயிரம்
- சைத்ரா ரெட்டி- ரூ. 25 முதல் ரூ. 30 ஆயிரம்