தினேஷ் மாஸ்டருக்கு எதிராக போராடும் நடன கலைஞர்கள்

தினேஷ் மாஸ்டருக்கு எதிராக போராடும் நடன கலைஞர்கள்


சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் திரிஷா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக உருவாகியது லியோ திரைப்படம். இப்படத்தில் `நான் ரெடி தான் வரவா’ பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. இந்த பாடலிற்கு நடன இயக்குநராக இருந்தவர் தினேஷ். இப்பாடலில் 1000-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் ஆடியிருப்பர். ஆனால் அதில் ஆடிய நடன கலைஞர்களுக்கு சரியான சம்பளம் போய் சேரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பலரும் அவர்களுக்கான நியாயம் கேட்டு போராடினார் ஆனால் பலனில்லை. அந்த பாட்டில் 35 லட்ச ரூபாய் முறைக்கேடு செய்ததாக நடன இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் தினேஷ் மாஸ்டர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக தினேஷ் உள்ளார். கனடாவில் வசிக்கும் நடன இயக்குனரான கௌரி சங்கர் என்பவரை தாக்கியதாகவும் தினேஷ் மாஸ்டர் மீது ஒரு புகார் இருக்கிறது. மேலும் நடன இயக்குனர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்த நடன இயக்குனர் மாரி என்பவர் மீதான பாலியல் குற்றசாட்டு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கௌரி சங்கர் புகார் அளித்திருந்தார். இந்த சூழலில் கடந்த மார்ச் மாதம் கனடாவில் இருந்து சங்கத்திற்கு வந்த கௌரி சங்கரை தினேஷ் மற்றும் சங்க உறுப்பினர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த குற்றச்சாட்டுகளுக்காக தினேஷ் மாஸ்டரை தலைவர் பதவியில் இருந்து நீக்க வெண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தன் மீது தவறு உள்ளதால் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக தினேஷ் கூறியதாலேயே அவசர பொதுக்குழு கூட்டப்பட்டதாக துணை தலைவர் கல்யாண் தெரிவித்துள்ளார். தற்போது பதவி விலகுவதற்கான படிவத்தில் கையெழுத்திட மறுத்ததால் தினேஷ் மற்றும் கல்யாண் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தலைவர் பதவியிலிருந்து தினேஷ் விலக வேண்டும் என கூறி கல்யாண் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதை அடுத்து தகவலறிந்து வந்த போலீசார் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *