எவ்ளோ வதந்தி வேணும்னாலும் பரப்புங்க, ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது.. தனுஷ் மேடையில் ஆவேச பேச்சு!

எவ்ளோ வதந்தி வேணும்னாலும் பரப்புங்க, ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது.. தனுஷ் மேடையில் ஆவேச பேச்சு!


நடிகர் தனுஷ் பற்றி அவ்வப்போது பல்வேறு வதந்திகள் வருகிறது. அதிலும் குறிப்பாக சமீபத்தில் பாடகி சுசித்ரா கூறிய ஒரு குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தன்னை பற்றி வதந்தி பரப்புபவர்களுக்கு நடிகர் தனுஷ் குபேரா பட இசை வெளியீட்டு விழாவில் பதிலடி கொடுத்து இருக்கிறார்.

4 வதந்தியை பரப்பி என்னை காலி பண்ண முடியாது

எவ்ளோ வதந்தி வேணும்னாலும் பரப்புங்க. என்ன negativity வேணும்னாலும் spread பண்ணுங்க. ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் ஒன்றரை மாதம் முன்பு என்னைப்பற்றி நெகட்டிவிட்டி பரப்புங்க.

தம்பிங்களா கொஞ்சம் தள்ளிப்போய் விளையாடுங்க ராஜா. இங்க இருக்குறவங்க என் ரசிகர்கள் கிடையாது, 23 வருஷமா என் கூடவே வந்த companions. நீங்க சும்மா ஒரு 4 வதந்தியை பரப்பி என்னை காலி பண்ணிடனும்னு நெனச்சா அதை விட முட்டாள்தனம் எதுவுமே கிடையாது. ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது.

எவ்ளோ வதந்தி வேணும்னாலும் பரப்புங்க, ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது.. தனுஷ் மேடையில் ஆவேச பேச்சு! | Dhanush Reply To Haters At Kuberaa Audio Launch

சாப்பாட்டுக்கு வக்கு இல்லாமலும் இருந்திருக்கிறேன்

 எண்ணம் போல் வாழ்க்கை. உங்களுக்கென இருப்பதை யாரும் எடுத்துக்கொள்ள முடியாது. சந்தோசமா இருங்க. சந்தோசத்தை வெளியில் தேடாதீங்க. அது உங்களுக்கு உள்ளே தான் இருக்கு,
 

நான் ஒரு வேளை சாப்பாட்டுக்கு வக்கு இல்லாமலும் இருந்திருக்கிறேன், இப்போது நல்ல நிலைமையிலும் இருந்திருக்கிறேன், எந்த நிலையில் இருந்தாலும் சந்தோசமாக தான் இருப்பேன். ஏனென்றால் நான் எப்போதும் சந்தோசத்தை வெளியில் தேடியது கிடையாது.

 சந்தோசம் நிம்மதிக்கு மேல் வாழ்க்கையில் எதுவுமே முக்கியம் இல்லை.

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *