பாதி உண்மை தெரிந்ததற்கே மயிலை வீட்டை விட்டு அனுப்பிய சரவணன் .. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ

பாதி உண்மை தெரிந்ததற்கே மயிலை வீட்டை விட்டு அனுப்பிய சரவணன் .. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ


விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியன் குடும்பத்திற்கு பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்துகொண்டிருக்கிறது. அரசி திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் அவளை வில்லன் கடத்திச்செல்ல, இறுதியில் அவன் தன் கழுத்தில் தாலி கட்டிவிட்டாதாக தானே தாலி கட்டிக்கொண்டு வந்து எல்லோரிடமும் கூறுகிறார் அரசி.

அரசி திருமண பிரச்சனை எல்லாம் முடிந்த நிலையில் தற்போது கதை மீண்டும் பொய் சொல்லி மொத்த குடும்பத்தையும் ஏமாற்றி வரும் மயிலின் பக்கம் சென்று இருக்கிறது.

பாதி உண்மை தெரிந்ததற்கே மயிலை வீட்டை விட்டு அனுப்பிய சரவணன் .. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ | Pandian Stores 2 Next Week Promo Mayil Sent Out

அடுத்த வார ப்ரோமோ

தற்போது வெளியாகி இருக்கும் அடுத்த வார ப்ரோமோவில் மயிலை ரெடி ஆகும்படி கூறி அழைத்து செல்கிறார் சரவணன்.

 மயில் டிகிரி முடிக்கவில்லை என்கிற உண்மை அறிந்து கடும் கோபத்தில் இருக்கும் சரவணன் நேராக மயிலை அவரது அம்மா வீட்டில் கொண்டு சென்று விடுகிறார்.”எந்த தைரியத்தில் இதை எல்லாம் செய்கிறீர்கள், +2 தான் படித்திருக்கிறேன் என சொல்லி இருந்தால் என்ன” என சொல்லி அவர் குடும்பத்தினரையும் கேட்கிறார் அவர்.

மயில் இனி அம்மா வீட்டில் தான் இருக்க வேண்டும் என சரவணன் கூறிவிட்டு போய்விட்டதனால் இனி என்ன நடக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

பாதி உண்மை தெரிந்ததற்கே மயிலை அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டாரே, இன்னும் போலி நகை, வயது அதிகம் போன்ற உண்மைகள் தெரிந்தால் என்ன ஆகுமோ?

ப்ரோமோ இதோ. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *