உலகின் Top 6 CEO-க்களின் பாதுகாப்பு செலவினங்கள் எவ்வளவு தெரியுமா?

உலகின் Top 6 CEO-க்களின் பாதுகாப்பு செலவினங்கள் எவ்வளவு தெரியுமா?


தொழில்நுட்ப உலகின் உயர் பதவிகளை குறிக்கும் வகையில், மெட்டா, கூகுள், ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்கள் தலைமை நிர்வாக அதிகாரிகளின் பாதுகாப்புக்காக அதிகளவில் முதலீடு செய்கின்றன.

தரவு பகுப்பாய்வு நிறுவனமான எக்விலரின் சமீபத்திய அறிக்கையின்படி, S&P 500 நிறுவனங்கள் பாதுகாப்பு செலவினத்தை இரட்டிப்பாக்கியுள்ளன.

மெட்டா CEO மார்க் ஜுக்கர்பர்க்


மெட்டா சிஇஓ(Meta’s CEO) மார்க் ஜுக்கர்பர்க்(Mark Zuckerberg) அதிக செலவினம் செய்யும் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

அவரது தனிப்பட்ட பாதுகாப்புக்காக $24.4 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

Top 6 Tech Companies CEO’s Security costs

இந்த தொகையில் அவரது குடும்பத்திற்கான பாதுகாப்பு மற்றும் அவரது வீடு மற்றும் பயணத்திற்கான கூடுதல் நடவடிக்கைகள் ஆகியவையும் அடங்கும்.

இந்த நிறுவனம் நிறுவனம் அதன் COO ஜாவியர் ஒலிவானின் பாதுகாப்புக்காக $900,000 செலவிடுகிறது.

கூகுள் CEO சுந்தர் பிச்சை

இந்தியாவின் தமிழ்நாட்டை சேர்ந்த சுந்தர் பிச்சை(Sundar Pichai) கூகுள்(Google) நிறுவனத்தின் CEO-வாக பதவி வகிக்கிறார்.

Top 6 Tech Companies CEO’s Security costs

கூகுள் தேடல் மற்றும் குரோம் ஆகியவற்றிற்கான அவரது பங்களிப்பு மிகப்பெரியதாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்திய-அமெரிக்க நிர்வாகியான சுந்தர் பிச்சைக்கு ஆண்டுக்கு $6.8 மில்லியன் பாதுகாப்பு செலவினங்கள் செய்யப்படுகிறது.

இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர் இளங்கலை பட்டம் பெற்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்ற பிச்சை, இரண்டு தசாப்தங்களாக கூகுளுடன் இணைந்துள்ளார்.

சுந்தர் பிச்சை தற்போது இப்போது $1 பில்லியனுக்கும் அதிகமான நிகர மதிப்புள்ள உலகின் மிக பணக்கார தொழில்நுட்ப நிர்வாகிகளில் ஒருவராக உள்ளார்.

அமேசான் CEO ஜெஃப் பெசோஸ்

Top 6 Tech Companies CEO’s Security costs

முன்னணி ஆன்லைன் வணிக தளத்தின் CEO-வாக ஜெஃப் பெசோஸ்(Jeff Bezos) வெற்றிகரமாக நடை போட்டு வருகிறார்.

அமேசான் நிறுவனம் அதன் CEO ஜெஃப் பெசோஸ் மற்றும் அதன் மூத்த முக்கிய நிர்வாகிகளின் பாதுகாப்பிற்காக $2.7 மில்லியன் தொகையை செலவிடுகிறது.

என்விடியா CEO ஜென்சன் ஹுவாங்

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Nvidia-வின் CEO-வாக ஜென்சன் ஹுவாங்(Jensen Huang) செயல்படுகிறார்.

Top 6 Tech Companies CEO’s Security costs

இவரது பாதுகாப்பிற்காக என்விடியா நிறுவனம் $2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவு செய்கிறது.

டெஸ்லா CEO எலான் மஸ்க்


நவீன உலகின் தொழில்நுட்ப துறையில் பல புதுமைகளை படைத்து வருபவர் Tesla  நிறுவனத்தின் CEO எலான் மஸ்க்( Elon Musk).

இவர் சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Top 6 Tech Companies CEO’s Security costs

அவ்வப்போது உலக அரங்கில் தன்னுடைய புதிய கருத்துக்களால் சலசலப்பை ஏற்படுத்தும் எலான் மஸ்க்கின் பாதுகாப்பிற்காக $2.4 மில்லியன் செலவிடப்படுகிறது.

ஆப்பிள் CEO டிம் குக்


Apple நிறுவனத்தின் CEO டிம் குக் (Tim Cook) பாதுகாப்பிற்காக கடந்த ஆண்டு $820,000 அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Top 6 Tech Companies CEO’s Security costs

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *