'என் பேரனின் முதல் மைல்கல்'.. வாழ்த்துகள் கண்ணா – ரஜினிகாந்த் பதிவு

சென்னை,
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன் நடிகர் தனுசுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூத்த மகன் யாத்ரா பள்ளிப் படிப்பை நிறைவு செய்துள்ளார். இதற்கான சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் கலந்து கொண்டனர். தங்கள் மகனை இருவரும் ஒன்றாக கட்டியணைத்து வாழ்த்தும் புகைப்படத்தை தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது பேரன் யாத்ராவை வாழ்த்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “என் அன்புக்குரிய பேரனின் முதல் மைல்கல். வாழ்த்துகள் யாத்ரா கண்ணா” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். பலரும் அவரது பதிவில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.