யோகி பாபு பகிர்ந்த "ஜெயிலர் 2" படப்பிடிப்பு சுவாரசியங்கள்

சென்னை,
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் 2023ம் ஆண்டு ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ படம் உருவாகி வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். முதல் பாகத்தை போல ‘ஜெயிலர் 2’ படத்திலும் மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் கேமியோ ரோலில் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் படத்தில் நடிக்கும் யோகி பாபு சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார் அதில் அவர் ‘ இப்பொழுது உள்ள இயக்குநர்களில் அதிக நகைச்சுவை உணர்வுள்ள இயக்குநர் அது நெல்சன் மட்டுமே. ரஜினிகாந்த் சார் ஒவ்வொரு நாளும் மிகவும் ஆர்வத்துடன் செட்டுக்கு வருகிறார்.
ரஜினி சார் நெல்சனிடம் “நம்ம யோகி பாபுவை சும்மா விடக்கூடாது. என்னை ஜெயிலர் பார்ட் 1-ல் மிகவும் கிண்டல் செய்து விட்டார். இந்த பாகத்தில் அதை சரிகட்ட வெண்டும் என கூறியுள்ளார்.. நாம் எந்த கமெண்ட் அடித்தாலும் பதிலுக்கு அவர் நன்றாக கவுன்டர் கொடுப்பார் அதனால்தான் அவர் இப்பொழுது சூப்பர் ஸ்டார்” என கூறியுள்ளார்.