இந்தியில் ரீமேக் செய்யப்படும் 'லப்பர் பந்து' படம்.. ஹீரோ இவரா?

சென்னை,
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான படம் ‘லப்பர் பந்து’. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடித்துள்ளனர். சவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை சுவாசிகா விஜய்க்கு பல நடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவரது நடிப்பில் சமீபத்தில் மாமன் படம் வெளியானது. அதனை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கி வரும் ‘சூர்யா 45’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், லப்பர் பந்து படத்தை பார்த்து ரசித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் அந்த கதையை இந்தியில் ரீமேக் செய்ய விரும்புவதாக தெரிவித்து இருக்கிறாராம். அவருக்கு ஜோடியாக லப்பர் பந்தில் நடித்த சுவாசிகா தான் நடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்து இருக்கிறாராம். அந்த தகவலை நடிகை சுவாசிகா பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.